தமிழக வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது வரவு செலவு திட்டத்தை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக வரவு செலவு திட்ட உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மார்க் கார்னி கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் இலங்கை விஜயம் குறித்த புதிய செய்தி

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில்  இன்று (15) வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அ’புரம் வைத்தியசாலை ஊழியர்களுக்காக குழு நியமனம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்களால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

‘தாஜா’ பண்ணும் வேலையில் கட்சித்தலைமை

பாதாள உலகக் குழுக்களின் கொலை வெறியாட்டங்கள், பாதாளக் குழுக்கள், குற்றங்கள், சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள முப்படைகள், அரிசித் தட்டுப்பாடு, தேங்காய்களின்  விலையேற்றம், ‘புது மாப்பிள்ளைகள்’ போல, அமைச்சர்கள் சிலர் செய்யும் அலப்பறைகள், அனுபவமற்ற பேச்சுக்கள், செயற்பாடுகள் என நாட்டு மக்களிடையில் கடும் எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் சந்தித்துவரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தனது அமைச்சர்கள், எம்.பிக்களினால் கட்சிக்குள்ளும் ‘புதிய நெருக்கடி’ ஒன்றை எதிர்கொண்டுள்ளது. 

யாழில்.கவனயீர்ப்பு போராட்டம்…

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக வியாழக்கிழமை (13) அன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்​னேடுக்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத்திட்டம்

கிளிநொச்சியில் உள்ள மகிழங்காட்டில் கொமர்ஷல் வங்கி முன்னெடுத்திருந்த தனது முன்னோடி திட்டமான “விவசாய நவீனமயமாக்கல்” இன் அறுவடை விழாவில் பங்கேற்று இத்திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடியது.

பெண்கள் அமைதியாக இருக்காமல் தைரியம், வலிமையுடன் இருக்கு வேண்டும்

அனுராதபுரத்தில்பெண்வைத்தியரைபாலியல்வன்புணர்வுக்குஉட்படுத்தியசம்பவம்,நமதுநாட்டைபொருத்தவரையில்முதலாவதுசம்பவமாகஇருந்தாலும்,பெண்களுக்குஎதிரானபாலியல்வன்புணர்வுமுதலாவதுசம்பவமும்அல்ல,இறுதியானதாகவும் இருக்காது என்பதே எமது அவதானிப்பாகும். 

போதைப்பொருட்களுடன் யாத்திரை சென்ற 393 பேர் கைது

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க வந்த 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.   ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

முதல் செயற்கை இதய அறுவை சிகிச்சை வெற்றி

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நபர் ஒருவர், செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய உலகின் முதல் நபராக உருவெடுத்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.