”அவ்வாறான சட்டம் எதையும் நான் விதிக்கவில்லை”

அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது கருத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியதாக தெரிகிறது.

‘யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே.ம.ச ஆட்சி அமைக்கும்’

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்த 36 மணி நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

”பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்”

இலங்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் பணியிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் வாக்குமூலம் வௌியானது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றன.

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி

கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

ரணிலைத் தூற்றுவது சரிதானா?

(R.Tharaniya)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது.

மாற்றுத்திறனாளி சமூகத்தினரை மதிக்க வேண்டும்

(R.Tharaniya* 

பொது போக்குவரத்து மட்டுமன்றி, பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் விசேட முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக முன்னுரிமை வழங்கப்படும். எனினும், எமது நாட்டை பொறுத்தவரையில், அவர்களை சிலர் மதிப்பதே இல்லை. பாராளுமன்றத்திலும், அவ்வாறான நிலை ஒன்று அண்மையில் ஏற்பட்டிருந்தது.  

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு   திங்கட்கிழமை (10)  மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

“ஆணிகளை புடுங்காதீர்: அர்ச்சுனாவுக்கு அறிவுரை”

உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கேட்டுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம், தேவையான ஆணிகளை புடுங்குமாறு கேட்டுக்கொண்டார்.