மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல்

4 வருட இராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியான்மரின் இராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என, மியான்மர் அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிரியா கலவரத்தில் பலி 1000+ ஆக அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

பெற்றோரின் பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறோம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சிறுமிகள் தங்கள் தந்தையாலும் பிற ஆண்களாலும் காதலர்களாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள்  நாளாந்த செய்திகளாக மாறி விட்டன. மேலே குறிப்பிட்ட இரு பிரிவுகளிலும் பாதிரியார்கள், மருத்துவர்கள்,  வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் அடங்குகின்றனர்.  

கொழும்பில் பின்வாங்கியது தமிழரசுக்கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மற்றொரு சட்டவிரோத சொகுசு வண்டி சிக்கியது

போலி ஆவணங்களை தயாரித்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று தெரணியாகலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை, நையாண்டி வேண்டாம்; தந்திரோபாயத்தை பயன்படுத்தவும்

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை நடத்த வேளாண் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட முறை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் விலங்குகளைக் கவனித்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.உண்மையில், காட்டு விலங்குகளால் காடுகளுக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்வதற்குக் குறிப்பிட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை தலையீடுகள் தேவை என்பது நீண்ட காலமாக சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கான செய்தி

5 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பிரதமரின் மகளிர் தின செய்தி- பிரதமர் ஹரிணி

உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம் இதுவாகுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 08: சர்வதேச மகளிர் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

இன்றைய மகளிர் தினத்தில் மகளிரைக் கொண்டாடும் தினமாக அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் விடயமாகவும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்.

’’ரணிலுக்கு மூளையில் பெரும் சேதம்’’

பெராரி ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜெசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான  பிமல் ரத்நாயக்க, வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில்  கவலையான செய்தியாக குறிப்பிட்டார்.