துப்பாக்கிச்சூட்டில் இருவர் மரணம் : வேன் எரிக்கப்பட்டது

மாத்தறை – தெவுந்த, சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நீதவான் விசாரணை, மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய அவர்களால் இன்று (22) அதிகாலையில் நடத்தப்பட்டது. 

கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா, மற்றும் பிள்ளையான் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் கைச்சாத்திட்டனர். 

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடும்ப வைத்தியர் திட்டம்

குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம் என்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார். இதன் கீழ், மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்றும் மேலும் இதற்காக ஒரு தனி மையம் நிறுவப்படும் என்றும் கூறினார்.

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்க ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப்.

தையிட்டி விகாரை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பித்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதிக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, மேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர்   பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் வௌ்ளிக்கிழமை (21) ஈடுபட்டனர். பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் பட்டதாரிகள் பலர் கண்ணீர் மல்கினர். 

லண்டனுக்கான விமானங்கள் இரத்து

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் இன்று புறப்படவிருந்த UL 503 மற்றும் 504 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது

சந்திரவெளி படுகொலை : 4 பேருக்கு மரண தண்டனை

கனகராசா சரவணன் மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த  4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை விதித்து  தீர்ப்பளித்தார். கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த  மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால்  அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு  மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பல்: அரசுகளை மீறிய தனி நபரின் செயற்பாடு

(சாகரன்)

சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பி இருக்கின்றது

மிகவும் மகிழ்ச்சியான செய்தி இது. அவரை வரவேற்கின்றோம்.

சிங்களம் படியுங்கள் தமிழில்

*அண்ணன் இப்ப கண்டி பbஸ் இருக்கா$அய்யா நுவர பbஸ் தaன் தியனவாத(dh)?*இப்பத்தான் ஒண்டு போனது$தaன் தமாய் எக்காக் கி(g)யே*அடுத்த பbஸ் எத்தனை மணிக்கு$ஈலங்க பbஸ் கீயட்டத(dh)?*கொஞ்ச நேரத்துல வரும்$தவ டிக்கக்கிங் எய்*அந்த வஸ் எங்க நிப்பாட்டுவாங்க$அர வஸ்ஸெக்க நவத்தண்ணே கொத்தனத(dh)?*அங்க நில்லுங்க வரும்$அத்தன இன்ட எய்*சரி அண்ணா நன்றி$ஹரி அய்யா ஸ்தூதிய்*தம்பி அந்தா வஸ் வருகுது$மள்ளி அர எனவா வஸ்ஸெக்க*கண்டிக்குப் போறாக்கள் ஏறுங்க.$நுவர யனகட்டி(t)ய நகிgன்ன*சீட் இருக்கா?$சீட் தியனவத(dh)?*ஓம் இருக்கு ஏறுங்க$ஒவ் நகி(g)ன்ன*இந்த வேக்கெல்லாம் பின்னால போடலாமா$மே வக்டிக்க பிட்டிபஸ்ஸேன் தாண்ட புளுவான்த(dh)?*ஓம் போட முடியும்$ஒவ் தா(dh)ண்ட புளுவான்*போட ஏலாது இடமில்ல$தா(dh)ண்ட வa இட நa*முன்னால போடுவம்$இஸ்ஸரஹின் தா(dh)மு*கொண்டு வாங்க$அரங் என்ட*வேகமா ஏறுங்க$வேaக(g)யேன் நகி(g)ன்ட*சீட் இருக்குபின்னுக்கு நிக்குற ஆக்கள் முன்னுக்குப் போங்க$சீட் தியனவா பிட்டிபஸ்ஸேன் இன்ன கட்டிய இஸ்ஸரஹாட்ட யன்ட*டிக்கட் எடுக்காத ஆக்கள் கேட்டு எடுத்துக் கொள்ளுங்க$டிகட் க(g)ண்ணெத்தி கட்டிய கத்தாகரலா க(g)ண்ட*எங்க$கொஹேத(dh)?*கண்டி$நுவர*ஒராளா?$எக்கெனாய்த(dh)?*இல்ல மூணுபேர்நaஹ துந்தெ(dh)னக்*மிச்சக்காசு தரல்ல$இத்துரு சல்லி துண்ணேநa*டிக்கட்ல எழுதிருக்கு$டிtக்கட்டெக்கே லியலா தியனவா*இறங்கும்போது கேட்டு வேண்டுங்க$வஹினகொட கத்தாக்கரலா க(g)ண்ட*முன்னால சீட் இருக்கு போய் இருங்க$இஸ்ஸராஹின் சீட் தியனவா கி(g)ஹில்லா வாடிவெண்ட*முன் சீட்ல இருக்கிறாக்கள் ஹாமதுறுக்கு சீட் குடுங்க$இஸ்ஸரஹா சீட் எக்கே இன்ன கட்டிய ஹாமது(dh)ருன்ட சீட் எக்க தெdhன்ட*அந்த வயசான அம்மாக்கு யாரும் சீட் குடுங்கஅர வயசக்க அம்மாட்ட கவ்ருஹரி சீட் தெ(dh)ன்ட*குழந்தையோட வாற அம்மாக்கு யாரும் சீட் குடுங்கவbவாத்தெக்க என அம்மாட்ட கவ்ருஹரி சீட் தெ(dh)ன்ட*நிக்க வேணாம்$ஹிட்டகெ(g)ண இண்ட எப்பா*முன்னால சீட் இருக்கு$இஸ்ஸரஹா சீட் தியனவா*போய் இருங்க$கி(g)ஹின் வாடிவென்ன*அன்னாசி வேக் ஐம்பது ரூபாய்$அன்னாசி மல்லக் ருப்பியல் பணஹாய்*கொய்யா$பேர*மாங்காய்$அம்வ*கச்சான்$ரட்டக்கஜு*வடை$வடே*இறால் வடை$இஸ்ஸோ வடே*தண்ணி போத்தல்$வத்துர வோத்தலய*தண்ணி ஒண்டு தாங்க$வத்துரக் தெ(dh)ன்ட*இந்தாங்க$மென்ன*மிச்சக்காசு வேண்டாத ஆக்கள் கேட்டு வேண்டிக்கொள்ளுங்க$இத்துரு சல்லி கgத்த நெத்தி கட்டிய கத்தாக்கரலா க(g)ண்ட*இறங்கப் போறீங்களா?$வயினவத(dh)?*ஓம் முன்னுக்கு இறங்குறன்$ஒவ் இஸ்ஸரஹா வயினவா=============================================1)கொழும்புகொள(ம்வb)+புறக்கோட்டைபிட்டகொட்டு(t)வ+வெள்ளவத்தைவaல்லவத்த+தெஹிவளைதெ(dh)ஹிவள+மஹரகமைமஹரகம+பொரள்ளைபொ(b)ரள்ள+ஸ்ரீ ஜயவர்த்தனபுரம்ஸ்ரீ ஜயவர்தனபுர+மருதானைமறதா(dh)ன+மாளிகாவத்தைமாலிகா(g)வத்த+கடவத்தைகடவத்த+ஹோமாகமைஹோமாக(g)ம+மொறட்டுவைமொறட்டுவ+ரத்மலானைறத்மலான+கல்கிஸ்ஸைக(g)ல்கிஸ்ஸ+பத்தரமுல்லைப(B)த்தரமுல்ல+இராஜகிரியராஜகி(g)ரிய+கொட்டாவைகொட்டாவ+பெலவத்தைபaலவத்த2)காலிகா(g)ல்ல3களுத்துறைகளுத்தற4மாத்தறைமாத்தற5கம்பஹாகம்பஹா6ஹம்பாந்தோட்டைஹம்பந்தொட்ட7இரத்தினபுரிறத்ணபுர8கேகாலைகேaக(g)ல்ல9கண்டிமகநுவர10நுவரெலியாநுவரெலிய11அம்பாறைஅம்பாற12மொனராகலைமொனறாகல13பதுளைப(B)துள்ள14மட்டக்களப்பு மடகளப்புவ15மாத்தளைமாத்தலே16திருகோணமலைத்ருக்குணாமலய17யாழ்ப்பாணம்யாப்பனய18புத்தளம்புத்தளம19அனுராதபுரம்அனுராத(dh)புர20வவுனியாவவ்னியாவ21கிளிநொச்சிகிலிநொச்சிய22மன்னார்மனாரம23முல்லைத்தீவுமுலத்திவ்24குருநாகல்குருநேaக(g)ல25பொலனறுவைபொளொன்னறுவ=================================+எத்தனைபேர்?கீதெ(dh)னெக்?+ஒராளா?எக்கெனாய்த(dh)?+ரெண்டுபேரா?தெdhன்னாய்த(dh)?/தெ(dh)ன்னெக்த(dh)?+மூண்டுபேரா?துந்தெ(dh)னாய்த/துந்தெdhனெக்த(dh)?+நாலுபேரா?ஹத்தரதெனாய்த(dh)?/ஹத்தரதெdhனெக்த(dh)?+அஞ்சுபேரா?பஸ்தெ(dh)னெக்த(dh)?+ஆறு பேரா?ஹயதெ(dh)னெக்த(dh)?+ஏழு பேரா?ஹத்தெ(dh)னெக்த(dh)?+எட்டுப்பேரா?அட்டதெ(dh)னெக்த(dh)?+ஒன்பதுபேரா?நமதெ(dh)னாய்த(dh)?/நவதெ(dh)னெக்த(dh)?+பத்துப்பேரா?த(dh)ஹதெ(dh)னெக்த(dh)?+ஒராள்எக்கெனாய்/எக்கெனெக்+ரெண்டுபேர்தெ(dh)ன்னாய்/தெ(dh)ன்னெக்+மூணுபேர்துந்தெ(dh)னெக்+நாலுபேர்ஹத்தரதெ(dh)னெக்+அஞ்சுபேர்பஸ்தெ(dh)னெக்+ஆறுபேர்ஹயதெ(dh)னெக்+ஏழுபேர்ஹத்தெ(dh)னெக்+எட்டுப்பேர்அட்டதெ(dh)னெக்+ஒன்பதுபேர்நமதெ(dh)னெக்+பத்துப்பேர்தஹதெ(dh)னெக்