எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சர்வகட்சிக் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அந்த ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள 525 முறைப்பாடுகள் ஆகியவற்றை, கட்சி உறுப்பினர்களிடம் கையளித்து அவை அவை தொடர்பில் இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் அறியமுடிகின்றது.
இதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த சந்திப்பில் எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது.