(சாகரன்)
இது வெறும் கேரளாவிற்கான பிரச்சனை அல்ல. ஒவ்வொரு மனிதனும் சிறிது காலம் வாழ்ந்து விட்டு மறைந்து போகும் இந்த பூமிப் பந்து மட்டும் நிலையானது. எமக்கு பின்பு அடுத்த சந்ததி உயிரினங்கள் இங்கு பிறந்து வாழக் காத்திருக்கின்றன. அதுதான் நாம் கூறும் எமது பரம்பரை வாழ்வதற்காக இந்த பூமி காத்திருக்கின்றது. இவர்களின் நியாயமான வாழ்விற்கு இந்த பூமிப் பந்தின் இயல்பான இருக்கை அவசியமாகின்றது. கொந்தளிப்புகளும், குமுறல்களும், எரிமலைகளும், சமுத்திரம், காற்றின் சீற்றங்களும், கொழுத்தும் வெப்பமும் ஏற்புடையன அல்ல.
பூமிப் பந்தின் உருவாக்கத்திற்கும் இங்கு உயரினங்கள் தோன்றி இன்று வரையிலான கூர்ப்பு வளர்சிக்கும் பல கோடி வருடங்கள் எடுத்திருக்கின்றன. இதில் இயற்கையுடன் அனுசரித்து வாழும் உயிரினங்கள் மரங்கள் செடிகள் இன்ன பிறவற்றுடன் இணைந்ததே மனித குலத்தின் வாழ்வு. இதில் ஒரு தரப்பில் பிசகு ஏற்பட்டாலும் மற்றைய தரப்பிலும் பிசகாகிவிடும். பூமி வெப்பமாதலுக்கு மரங்களின் பிராண வாயுவான காபன் வாயு குடும்பத்தின் சமநிலையற்ற தன்மை காரணமாக ஏற்படுகின்கின்றது. இது மனிதன் சுவாசத்தில் இருந்து வெளியிடும் காற்றில் இருப்பது யாவரும் அறிந்ததே. மரத்தின் பிராணவாயு ஏனைய உயிரினங்களுக்கு நச்சுவாயு. மனிதனின் பிராண வாயு மரங்களுக்கு நச்சு வாயு. ஒன்று உள்ளெடுக்க மற்றொன்று வெளிட்டு உதவுவதும், இன்றொன்று வெளியிட மற்றொன்று உள்ளெடுப்பதும் என்ற சுழற்சி முறை இங்கு பூமிப்பந்தின் இயங்கியலை சம நிலையில் வைத்திருக்கின்றது.
தொழிற் புரட்சியின் பின்பு உருவான கட்டுப்பாடற்ற உபரி உற்பத்திக்கான தொழிற்சாலைகள் கட்டுப்பாடற்ற காபன் வாயுக்களை வெளியிட்டு இந்த சமநிலையை குழப்பி வருகின்றது. இது பூமி இயல்பிற்கு மாறாக அதிக வெப்ப நிலையை அடைவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இது விஞ்ஞானிகளின் நிரூபிப்பு. விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்ட இதனையே சூழலியலாளர்கள் தமது விடாப்படியான செய்தி பரப்பல் மூலம் சொல்லியும் வருகின்றனர். இதனை பெரும்பாலான மக்கள் குழாமும் ஏற்று விட்டது. ஆனாலும் ஏகாதிபத்தியங்கள்…..?
இந்த கரியமில வாயுவை கட்டுக்குள் வைத்திருக்க உலக நாடுகள் கூடி இழுக்க முற்பட்ட ‘தேர்” ‘சாதிய” வெறியால்; இயந்திரத்தை அல்லது இராணுவத்தை கொண்டு வந்து தேர் இழுந்த கதையைப் போல் சமூக நல் இணக்கத்தை குழப்பி நான் என் விருப்பப்படிதான் செய்வேன் என்று அண்மையில் பிரான்ஸ் இல் நடைபெற்ற கரியமில வாயுக் கட்டுப்பாட்டு மகாநாட்டு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏதேச்சாகாரமாக மீறிய ஒழுங்குகள் பூமி வெப்பமாதலை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலமையை ஏற்படுத்தியிருக்கின்றன.
இயல்பாகவே வெப்பம் அதிகமாக உள்ள அரபு தேச பிராந்தியத்திற்கு அருகில் உள்ள அரபிக் கடலின் நீர் ஆவியாகி தென் கிழக்கு பருவக் காற்றால் இந்தியா நோக்கி நகரந்து கேரளாவின் கிழக்காக அமைந்த இந்தியாவின் மேற்கு மலைத் தொடரில் குளிர்ந்து மழையாக காட்டாறாகி பாய்த வரலாறே அண்மைய வெள்ளப் பெருக்கின் ஊற்றுவாய். மலையைத் தாண்டி சிறிதளவு முகில்கள் இதே மேற்கு மலைத் தொடரின் கிழக்கு பக்கமாக அமைந்த இடங்களிலும் பொழிந்து தள்ளியதையும் நாம் அறிவோம்.
இயல்பான வழiமான வெள்ளத்திற்கு வடிகால் அமைத்து குளங்களை அமைத்து வாய்கால்கள் ஆறுகள் மூலம் இவற்றை இணைத்து உருவாகும் நீரின் பாய்ச்சலை அமைதிப்படுத்துவதும் பின்பு இவற்றை தேவையான போது பாவிப்பதும் என்ற பொறிமுறையை மனிதன் தனது வாழ்வியலாக கொண்டிருந்தான். மிகை நீரை சமுத்திரத்திற்குள் கலக்க அனுமதிப்பது தவிர்க்க முடியாது. அது உப்பு நீராகும் நிகழ்வு ஏற்பட்டாலும் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வு மனித குல வாழ்விற்கு மிகவும் அவசிய் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் நிலம் மீட்பு மட்டும் அல்ல நீர் மீட்பும் எமது வாழ்விற்கு அவசியம் ஆகின்றது நிலத்தின் வளத்தை பேசும் நாங்கள் நீரின் அது உப்பு நீராக இருந்தாலும் பேசியே ஆகவேண்டும் வெறும் அரிசி சாப்பாடு ஆகாது அது மீனுடனும் கலக்கக்பட வேண்டும் அதுவே மாப்பொருளுடன் புரதத்தை கலக்க ஏற்பாடு செய்யும்.
முல்லைப் பெரியாறு இதனை ஓட்டிய அணை திறப்பு மூடல் கேரளாவின் தமிழ் நாட்டிற்கான நீர் வழங்கலை செய்வில்லை என்ற தமிழ் நாட்டுக்காரர்களின் கோரிக்கையும் எமது தேவைக்கு போக மீதியைத்தான் தர முடியும் நாம் நியாயமாகதான நடக்கின்றோம் என்ற மலையாளிகளின் வாதமும் இரு தரப்பிலும் மொழி வெறியாக மாறி அரசியல் நடத்துவதும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் இங்கு இந்திய அரசிற்கு நாடுதழுவிய பொதுக் கொள்ளை உருவாக வேண்டும் நதி நீரைப் பங்கிடுவதில் இதில் மத்தியிலும் மாநிலத்திலும் தமக்கான ஆட்சியை நிறுவும் அரசியலே இந்த நீர் பங்கீட்டு பிரச்சனை நியாயமாக தீர்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம்.
இவற்றால் ஏற்படுதப்பட்ட இரு தரப்பு காழ்புணர்ச்சிகளும் கேரளா வெள்ளத்தில் மூழ்கிய போது ஆதரவு அனுதாப கைகொடுப்போம் வார்த்தைகளை தவிர்த்து நல்லா வேண்டும் என்ற மனிதத் தன்மையற்றை எரியிற வீட்டில் கொள்ளி புடுங்கும் செயற்பாடுகள் பதிவுகள் கண்டிக்கத்தக்கன….. அருவருக்கத்தக்கன. இவற்றிற்கு அப்பால் பெரும் பகுதி மக்கள் இந்த மக்களுக்கான ஆதரவு செயற்பாடுகள் சிறப்பாக மீட்பு பணியில் ஈடுபட்ட கேரளத்து, கரையோர தமிழக கடற் தொழிலாளிகளின் செயற்பாடுகள் என்றும் போல் தற்போதும் வாழ்விற்கான நம்பிக்கைகளை ஏற்படுத்தியே இருக்கின்றன. பிரபலங்களின் தன்னலம் அற்ற செயற்பாடுகளையும், ஏதிலிகளும் தம்மால் இயன்றைவற்றை உடல், பொருள,; ஆவியை துறந்து செயற்பட்டது கண்களில் நீரை வரைவழைத்த நன்றிச் செயற்பாடுகள் மனிதம் எப்போதும் போல் இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
(இன்னும் வரும்….)