மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
மழை நின்றாகிவிடது. வெள்ளமும் வடிய ஆரம்பித்துவிட்டது, அங்காங்கே கும்பை கூழம் சேறு சகதிகளே மிஞ்சிக்கிடக்கின்றது. தன்னார்வு நிறுவனங்கள் தம்மால் சேகரிக்கப்பட்ட பொருட்களை தற்காலிகமாக சேகரித்து வைக்க ‘உதவி’ சிலர் இனிமேல் நீங்கள் இங்கிருந்து எந்த பொருளையும் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்ற மிரடடல்;களும் ஆரம்பமாகிவிட்டன. நிவாரணப் பொருட்களை வழிப்பறி செய்யும் கும்பல்களும் தங்கள் பேட்டைகளில் சண்டித்தனம் செய்து பொருட்களை பறித்தல் என்பதுவும் ஆரம்பமாகிவிட்டது. யாரோ தன்னார்வத்துடன் சேர்த்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் போது தமது கொடியினை அதில் திணிக்கும் பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் தலைவர்களைக் கொண்ட சென்னையில் இதனைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும். பிழையான வழியில் பணம் சேர்காதவனை ‘பிழைக்கத் தெரியாத ஆள்’ என்று தூற்றுவதும,; லஞ்சம் வாங்கும் பிள்ளையை சோறு போடமாட்டேன் என்று விரட்டாத தாயும், சின்னவீடு வைத்திருத்தல் அவர் தகுதிக்கு பொருத்தனமானது என்று பெருமைப்படும் அரசியல் தொண்டர்களும், இதனைக் கண்டும் கணாமலும் இருக்கு வீட்டம்மாவும் இருக்கும் நகரத்தில் வெள்ள நிவாரணத்தில் நடக்கும் கொள்ளைகளை எதிர்பார்காமல் இருக்க முடியாதுதானே….?


ஆனால் நான் கண்ட பல நண்பர்களும் கிராமத்து மக்களும் இந்த அநியாயங்களை இனம் கண்டுதான் இருக்கின்றனர். என்ன செய்ய பசங்களின் படிப்பிற்காக பணிந்து போகின்றேன் என்றும் நாளுக்கு வெறும் 150 ரூபாய்கு கூலிக்கு போகும் பெண்களும்… கூலியின் குறைவைக் சுட்டிக்காட்டும்போது.. ‘ஆனாலும் சார் நம்ம பிளார்ரிக் பக்ரி முதலாளி ரொமப் நல்லவர் ஏன ;எண்டால் அந்தியலும் சாயந்தரத்திலும்; எம்மை கம்பனி பஸ்சில் ஏத்தி இறக்குகின்றார் தொழிற்சாலைக்கு இனாமாக….’ ‘இதெல்லாம் உங்களிடம் வேலையையில் பிழிந்து எடுப்பதற்காக….’ என்று கூறினால் ‘…..ஓய்வு தராத வேலை என்றாலும் இரண்டு காப்பித்தண்ணி இனாமாகத் தருகின்றார்….’ என்று வெள்ளந்தியாக கூறும் மக்களும். ‘..சரி உங்க முதலாளி இந்த தொழிற்சாலையை ஆரம்பிம்பதற்கு முன்பு 2 வருடங்களுக்கு முன்பு வெறும் அன்னம் காய்ச்சியாக இருந்தவர் தற்போது நாலு வீடு மூன்று வண்டி என்று ரொம்ப வசதியாக இருக்கின்றார்….’ என்று அவரின் பெருமையை தங்கள் பெருமையாக பறை சாற்றும் அப்பாவி மக்களையே நான் கிராமங்களில் பார்த்தேன் ‘….இவையெல்லாம் உங்கள் உழைப்பிற்கு நியாயமான ஊதியம் வழங்காமல் வறுகிய பணத்தில் முதலாளி வாங்கியவர்….’ என்றால் ‘ஆமா… இல்லை’ என்று ஏற்றுக் கொண்டும் பின்பு பயத்தில் மறுப்பதுமாக இருந்த கிராமத்தின் வெள்ளம் மக்களைப் போலவே வெள்ளந்தியாக வாய்கால் வழி ஓடி ஏரியில் தங்கிக் கொண்டது. இவ் மக்களை மழை வெள்ளம் மூழ்கடிக்கவில்லை.

ஆனால் இந்தக் கிராமங்களின் விளைநிலங்களை எல்லாம் ‘புளொட்’ போட்டு ‘பிளாட்டு’ கட்ட முயலும் செயற்பாடுகள் தமிழ்நாடு எங்கும் வியாபித்திருப்து எதிர்காலத்தில் ஏரிகள் காணமல் போவதும் வாய்கால்கள் மறிக்கப்படுவதும் நிலத்தில் நீர் ஊற முடியாமல் சீமெந்து தரைகள் விரிகப்படுவதும் தொடர்ந்தும் நடைபெற்றால் முழுத் தமிழ்நாடும் மழை வெள்ளத்தில் மூழ்;கும் அல்லது மழையில்லா வரட்சியில் தவிக்கும்.

மழை பெய்தும் வரட்சி என்ற கோரத்தாண்டவம் சென்னையில்தான் உள்ளது. நிபுணர்களே! சமூக ஆர்வலர்களே!! விழித்தெழுங்கள். மழை கொட்டோ கொட்டென்று கொட்டிய பின்பும் தண்ணீர் இல்லாத நிலமை நிலவுகின்றது என்றால் எங்கேயோ அல்ல முழுவதுமாய் இடிக்கின்றது. இதனை என்னுடன் விவாதத்தில் ஈடுபடும் சமூக ஆர்வலர்கள் கிராமத்து மக்கள் எற்றுக் கொண்டாலும் ஏன் இதனை இவர்களால் சிறிதளவேனும் மாற்ற முடியவில்லை. கலக்ரர் தரத்து ஆபீசர் சகாயம் போன்றவர்கள் என்று சிலர் இருந்தாலும்…? ஒரு சரியான தலமையுடனான அரசியல் இயக்கம் உருவாக்கப்படாமல் மாற்றம் சாத்தியம் இல்லை என்பது புரியும். திராவிடம் என்ற தேசியவாதம் பலவீனப்படுத்தப்படும் வரை அல்லது இந்துவத்துவா என்ற மதவாதம் அடித்து நொருக்கப்படாதவரையும் சாதிய அமைப்புககளை அடையாளப்படுத்தி சலுகை வழங்குவதை நிறுத்தி யாவரும் மனிதர்கள் என்ற பொறிமுறை உருவாக்கப்படாதவரை இந்த மாற்றத்திற்கான சாத்தியமும் இல்லை.

இந்த மாற்றம் நிகழும் வரை சென்னை மட்டும் அல்ல தமிழ்நாட்டின் பல நகரங்களும் இனிவரும் காலங்களில் மழை வெள்ளத்தில் மூழ்கும். ஆனால் மறுதினமே வெள்ளத்தில் மூழ்கிய நகரத்தில் தண்ணீர் தட்டுபாடும் நிலவும். என்ன விசித்திரமான நிலமைகள் இது. இதனை; 1985 களில் சென்னையில் வசிக்கும் போதே நான் அனுபவத்தில் கண்டு நண்பர்களுடன் கிலாகித்திருக்கின்றேன். இந்தியாவின் தலை சிறந்த கம்யூனிஸ்ட் பாலதணடாயுதபாணியின் வீட்டில் இருந்தபடியே அதுதான் தியாகராஜநகரில் உள்ள பாலன் பிளாட் இல் இருந்து கதைதிருக்கின்றேன். இன்று 30 ஆண்டுகள் கழிந்து இந்த நிலமைகள் மோசமாகி வருவதையே என்னால் அவதானிக்க முடிந்தது. முhற்றம் நிகழந்திருகின்றது என்றால் ஆம் என்று பதில் கூறினாலும் முன்னேற்றகரமான மாற்றமா? என்றால் அதுதான் இல்லை என்பதே பதில் எங்கேதான் போய் கொண்டிருக்கின்றது இந்த மனித குலம்
(இன்னும் வரும்…….மழை வெள்ளம்……..?)