ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டுவரப்பட்டுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள யோசனை குறித்து சபையில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவல் அநுரகுமார திசாநாயக்க, இந்த யோசனையை நிறைவேற்றிக்கொண்ட பின்னர், அலரி மாளிகையிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வெளியேற வேண்டுமென்றார். காரணம், அங்கு அவர்கள் செய்யும் செலவுகளையும், பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டே செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாதெனவும் கூறினார்.