பத்திரிகையாளர்கள் பேசவேண்டிய விடயத்தை ஒரு அரசியல்வாதி பேசியிருப்பது மெச்சத்தக்க நிகழ்வு. எதிரிகளையும் துரோகிகளையும் கொல்லாது மிரட்டல், வசதிவாய்ப்பு மற்றும் பணம் அல்லது Blackmail என்கிற பணையவைப்பு/பொறிவைப்பு மூலம் தங்களுக்கு வேலைசெய்பவர்களாக மாற்றும் தந்திரம் ஒரு பழைய ராசதந்திரம் எனினும் இது ஸ்ராலின்கால சோவியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்தி. புலிகள் இந்த உத்தியை பயன்படுத்த காரணமாக இருந்தவர் புலிகளின் பல சகுனிவேலைகளுக்கு காரணமாக இருந்த அன்ரன் பாலசிங்கம்தான். பாலசிங்கம் இந்த உத்தியை முதலில் பரிசோதித்துப் பார்த்தது PLOTE தாரகி சிவராமில். 1994/5ல் சந்திரிக்கா ஆட்சிமாற்றத்தின்போது சிவராம் யாழ்சென்று பாலசிங்கத்தை சந்தித்தபோது பாலசிங்கத்தால் வசியம் செய்யப்படுகிறார். 2 ஆண்டுகளில் சிவராம் முற்றாக உருமாற Tamilnet உருவாக்கப்படுகிறது. புலிகளின் காசில் ஒரு “பத்திரிகையாளராக” சிவராம் உலகம் சுற்றும் வாலிபனாகிறார். பாலசிங்கத்தின் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்பொறுப்பு புலனாய்வு பொட்டனிடம் கொடுக்கப்படுகிறது. NGO, INGO, ஊடகத்துறை, அரசியல் கட்சிகள் முதலியவற்றை தென்னிலங்கையிலிருந்து வசியப்படுத்தி நடைமுறைப்படுத்தும் முகவராகவும் சிவராம் மாற்றப்படுகிறார்.(பாலசிங்கத்தின் தெரிவான முகவர் சிவராம் அற்புதமான தெரிவு.
ஆங்கிலத்தில் சரளமான புத்திஜீவி, தென்னிலங்கை அரசியல், பத்திரிகைத்துறை, NGO, ஈழவிடுதலை இயக்கங்கள், கலைஞர்கள்+ புத்திசீவிகள் என்பவற்றின்/என்பவர்களின் சூக்குமங்கள் அறிந்தவர். ஒரு மேட்டுக்குடி பின்புலத்திலிருந்து வந்தவர் என்றாலும் மது மாது பழக்கங்களாலும் தனிப்பட்ட பலவீனங்களாலும் சமூகத்தில் முன்னேறமுடியவில்லை என்ற காழ்ப்பில் இருந்தவர் என்பதால் வசியத்துக்கு வசமாக தயாராக இருப்பவர்) 1995 ன் பிற்பாதியில் யாழ் படையினர் வசம் வருகிறபோது கிழக்கில் பல நிலப்பரப்புக்கள் புலிகளிடம் வர இத்திட்டத்தை மட்டக்களப்பானான சிவராம் கிழக்கிலிருந்து நடைமுறைப்படுத்த வசதியாகிறது.
இக்காலத்தில் கிழக்கிலிருந்து வந்த தினக்கதிர் பத்திரிகை( சாந்தி சச்சிதானந்தன்/மனோ ராஜசிங்கம் தம்பதியரின் INGO) புலிகளின் ஒரு Frontal organisation. எனவே,கிழக்கு ராஜா கருணாவும் ஒரு முக்கியமான பங்காளி. இத்திட்டத்திற்கு இக்காலத்தில் கிழக்கிலிருந்த வடக்கு பத்திரிகையாளர்களான ராமசாமி துரைரட்ணம், கொல்லப்பட்ட ஐயாத்துரை நடேசன் முதலியவர்களும் சிவராமுக்கு பேருழைப்பு/உதவி வழங்கினார்கள்.
சிவராம் தனிப்பட்டரீதியில் திருகோணமலை MP தங்கத்துரையை அறிந்தவர். அவரால் தங்கத்துரையை வழிக்கு கொண்டுவரமுடியவில்லை. விளைவு ஏற்கெனவே சம்பந்தனுக்கும் தங்கத்துரைக்கும் இடையிலிருந்த பதவிப்போட்டியும் காரணமாக தங்கத்துரை புலிகளால் 1997ல் தீர்த்துக்கட்டப்படுகிறார்.
அடுத்த இரண்டாண்ட்டுகளில் இப்போதைய சுமந்திரனைவிட பலமடங்கு திறமைசாலியும் சர்வதேச Academic ம் புத்திஜீவியுமான நீலன் திருச்செல்வத்தையும் கரும்புலிமூலம் கொன்றதுமூலம் பாலசிங்கத்தின் துர்கனவு துர்நனவாகிறது. இதற்கிடையில் பொட்டம்மான் துட்டன் சுரேஷ் பிரேமச்சந்திரனை தன்மனைவி வழி சுரேசின் மனைவிவழி வழிக்கு கொண்டுவருகிறார். கூடவே கஞ்சா மற்றும் கடத்தல் மாபியாக்காரன் செல்வம் அடைக்கலநாதனை மிக இலகுவாக பொட்டன் வழிக்கு கொண்டுவருகிறான். டக்ளஸுக்கு நெருக்கடி அற்புதன்மூலம் கொடுக்கப்பட ஒரு கட்டத்துக்குமேல் சகிக்கமுடியாத EPDP “மத்தியகுழு” அற்புதனுக்கு மரணதண்டனை நிறைவேற்றுகிறது.
புலிகளின் நெருக்கடியால் சந்தர்ப்பம் பார்த்திருந்த சந்திரகுமார் லண்டனுக்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி குடும்பத்தோடு ஒடுகிறார். முதுகெலும்பில்லாத PLOTE சித்தர் புலிகள் பக்கம் சாய்ந்திருப்பார். ஆனால் தீரன் மாணிக்கம்தாசன் ஒரு வணங்காமுடி என்பதால் அது சாத்தியமாகவில்லை. EPRLF வரதர்- சுபத்திரன்- சுகு அணி புலிகளுக்கு கடைசிவரை மசியவில்லை எனினும் அதனுடைய வலிய ஓட்டி சுபத்திரனை பின்னாளில் கொன்றும் (EPRLF ன் வளங்களை துட்டன் சுரேஷ் சூறையாடிச்சென்றதாலும்) இக்குழுவை பாரிசவாதத்தில் முடக்கினர் புலிகள்.
இதுதான் பாசிசபுலிகள் தமது ஊதுகுழலாக கூட்டமைப்பை உருவாக்கிய வரலாறு. பின்னிணைப்பாக ராஜன் ஹூல் இதனை ஆங்கிலத்தில் விளக்கி எழுதிய மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக சங்கத்தின் அறிக்கையை இணைத்துள்ளேன்.
– நட்சத்திரன் செவ்விந்தியன்
The LTTE’s Strategy
It is well known that during 2001 the LTTE was facing a tremendous shortage in its fighting cadre. Militarily, the situation was stalemated. However, the Southern polity lacked the ability to make a decisive political gesture that would have broken the back of the problem. There was a lack of governance on the part of the PA government that was pre-occupied with the question of survival in Parliament. The UNP then in opposition was obsessed with capturing power in the short term at any cost. Its approach to the ethnic question did not aim at a solution, but rather at turning Tamil votes in its favour and in keeping the LTTE quiet for a while to stabilise the Southern economy, and hence its hold on power. The LTTE planned out its strategy accordingly.
The present international climate entailed that it had to show itself amenable to a political solution. It also precluded a sensational use of terror. While it had cornered itself into going for a separate state at any cost, faced with declining population resources it could not prolong the war indefinitely. Events indicate that it was working towards a decisive engagement that would place the Sri Lankan government in a highly compromised position.
Some time after the Sri Lankan Army took Jaffna in 1996, the LTTE’s uncompromising hostility towards other groups and political parties began to change. With amenable individuals the process had begun even earlier. The ACTC leader Kumar Ponnambalam, earlier a sworn enemy of the LTTE, started making overtures to the LTTE in 1994 to work out a mutually profitable arrangement. The TELO in Vavuniya, even while working with the Army in Vavuniya and torturing LTTE suspects, reached a commercially lucrative arrangement with the LTTE to aid the smuggling of banned items to the LTTE-controlled area. LTTE gunmen began to be seen in TELO offices in Vavuniya, in 1997.
The LTTE soon saw the advantage of using its erstwhile sworn enemies to articulate itself politically. Another sworn enemy, Suresh Premachandran, took away a faction of the EPRLF and made a deal with the LTTE in 1999, as did TELO leader Adaikkalanathan (Selvam). Thus, without placing itself before the electorate, the LTTE could back the others and demand its price. For the others, from a position of hardly being able to campaign at elections, they could now enter parliament with the full force of the LTTE’s terror aiding their campaign.
However, the only party having a traditional base in Tamil society was the TULF. Although the party faced a low period in exile in the 1980s, in the absence of a solid alternative, people have tended to come back to it. On the LTTE’s part, it undertook a campaign of selective assassination of persons from other parties and groups who showed signs of honour and independence. In the second round of killings of TULF leaders beginning in 1997, Neelan Tiruchelvam was the fifth to be assassinated. Months later, by 2000, the TULF had almost buckled down. The process was completed by the assassination of the popular Batticaloa MP, Nimalan Soundaranayagam in November 2000.
The final nail, as it were, was driven into the coffin when a divided TULF was dragged into the Tamil National Alliance (TNA) in time for the December 2001 elections. The other parties in the TNA were the ACTC, EPRLF (Suresh) and TELO. The LTTE’s aim was to use the TULF’s base, downsize the TULF old guard, and in their place put in members of the other three groups along with its own nominees. To this end the TULF old guard had been severely enfeebled by assassination and those who took their place were often weak figures lacking the proverbial charisma of the old guard. To the LTTE, the result was a perfect tool.
The idea of the TNA was floated when Parliament was dissolved by the President and the holding of elections in December 2001 was announced. By this time the LTTE had established a number of front organizations and had secured almost complete control over the Tamil media in both Colombo and the North-East. An important role here was also played by the group in Batticaloa, known as the Oodaham or Media.Prominent in this group are the editor of Tamil Net, the Virakesarai columnist who tried to say that parents around Batticaloa were voluntarily giving the children to the LTTE, and a leading figure in Batticaloa’s NGO Consortium and the local newspaper, Thinakkathir. Their names featured prominently in bullying and cajoling the TULF and ACTC into the TNA.
The three mentioned were once leading ‘traitors’ in the LTTE’s book. The first was a key member of the PLOTE. The second was Public Relations Officer in the North-East Provincial Council that was provided security by the Indian Army. The third was a Central Committee member of the EPRLF. This is an example of the LTTE’s new approach. Such persons were bound to show even greater zeal in crushing dissent against the LTTE.
Link: http://uthr.org/bulletins/bul28.htm#_Toc282126