சென்னையில் வெள்ளம் வந்த போது மக்கள் சாதி மத பேதத்தை மறந்து யார் உணவு கொடுத்தாலும் வாங்கி உண்டார்கள். ஆச்சாரமான பிராமணர்கள் கூட முஸ்லிம்கள் கொடுத்த உணவை வாங்கி உண்டார்கள். ஆனால் தமிழீழம் கேட்ட தமிழர்கள் இந்தியப் படைகளுடன் புலிகள் யுத்தம் செய்த காலத்தில் அகதிகளாக இருந்த இடங்களில் தொண்டர்கள் சமைத்துக் கொடுத்த உணவை மேட்டுக் குடிகள் வாங்கி உண்ண மறுத்து தங்களுக்கு உணவுப் பொருட்களைத் தரும்படியும் தாங்கள் சமைத்து உண்ணுவோம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
ஊரெழுவில் ஒரு பாடசாலைக்குள் அகதிகள் தங்கியிருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் ஒழுகும் ஓட்டைக் கூரைக்குள் தங்கவிடப்பட்டு மேட்டுக் குடிகள் நல்ல பகுதிகளுக்குள் இடம்பிடித்துக் கொண்டார்கள். கைக்குழந்தைகளுடன் தங்கியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொஞ்சம் இடம் கொடுக்கும்படி ராஜினி திராணகம கேட்டபோது உன் பல்கலைக்கழகப் புத்தியை பல்கலைக் கழகத்தில் போய்க் காட்டு என்று ராஜினியை மேட்டுக்குடிகள் எச்சரித்தன. இது ராஜினியின் முறிந்த பனை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது..
வடமராட்சியை சுனாமி தாக்கியபோது வல்வெட்டித்துறையில் அகதிகளாகத் தங்கியிருந்தவர்களுக்கு ஒரு ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் உணவு சமைத்துக் கொடுக்கச் சென்றபோது அந்த அகதிகள் உணவை வாங்கி உண்ண மறுத்துவிட்டார்கள். காரணம் எந்தச் சாதி சமைத்த உணவோ என்று தங்களுக்குத் தெரியாது. தாங்கள் எல்லோரிடமும் உணவு வாங்கி உண்ண மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். அவர்கள் வேறு யாருமல்ல பிரபாகரனின் சாதியினர்தான். அப்படிப் பார்க்கும் போது சென்னை மக்கள் உயர்ந்து நிற்கிறார்கள்!
(Rahu Rahu Kathiravelu)