2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துகனிப்பை தெரிவித்துள்ளது. 17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது.