(எம். காசிநாதன்)
கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது.