ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையிலான, 2 ஆம் கட்ட கலந்துரையாடல் இன்று (21) இடம்பெறவுள்ளது. இக் கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இருதரப்பும் இணைந்து அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள புதிய கூட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. குறித்த இரு கட்சிகளுக்கிடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், இக் கலந்துரையாடல் தீர்மானமிக்க ஒன்றாக அமையுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.