(எம்.எஸ்.எம். ஐயூப்)
அரசியல் என்பது ஒரு வகையில் விசித்திரமானது. தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, அதன் பின்னர், தமது மகனுக்கு அப்பதவியைக் கைமாற்ற நினைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து, அவரது கனவுகளைச் சிதறடிக்கச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதே மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் ஜனாதிபதியாக நினைப்பதாக இருந்தால், அந்த அரசியல், எவ்வளவு விசித்திரமானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.