நேர்காணல்
– முருகேசு சந்திரகுமார்
நேர் கண்டவர் – வாசுகி சிவகுமார்
தமிழரின் அரசியல் நகரமுடியாத நிலையில் மாற்றுத்தலைமையையும், மாற்று அரசியலையும் எதிர்பார்த்து நிற்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதைக்குறித்துப் பேசுகிறார் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார்.
தமிழ் மிதவாத அரசியல் சக்திகளிடத்திலே இருக்கின்ற எதிர்மறையான அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல், ஊடகங்களும் மக்களும் பொது நிறுவனங்களைச் சேர்ந்தோரும் இனவாத அரசியலின் பின்னே கண்ணை மூடிச்செல்லும் அபாயத்தை இந்த நேர்காணலில் அவர் விளக்குகிறார்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்ட அரசியல் உரையும் வாழ்க்கை மேம்பாடும் சமூக சமத்துவமுமே தமிழ் மக்களுடைய அரசியல் தேவையாகும். இதையே தாம் முன்னெடுப்பதாக வலியுறுத்தும் முருகேசு சந்திரகுமார், மாற்று அணிக்கான கருக்கட்டலை இங்கே கோடி காட்ட முற்படுகிறார்.