அட்சய திருதி நம்பிக்கைகள்………?

(சாகரன்)
வளர் பிறையில் தொழிலை ஆரம்பிக்க பொருட்களை வாங்கினால் பூமி பந்தின் கால நிலைக்கு ஏற்ப தொழில் சிறப்பாக அமையும் என்பது ‘….பொன்னை இந்நாளில் வாங்கி வீட்டில் வைத்தால் பொருள் குவியும்….” என்ற (மூட)நம்பிக்கையாக வியாபாரிகளினால் மாற்றப்பட்டு தங்களின் பணம் சம்பாதிக்கும் போக்கிற்குள் சமான்ய மக்களை விழுத்தி விட்டிருக்கின்றது நமது மூதாயைர்களின் ஐதீக செயற்பாடுகள். காலத்தே பயிர் செய் என்பதுவும் இதுதான். இது தற்போது காலத்திற்கு காலம் கல்லால் பெட்டியை நிரப்பு என்று பண்டிகைகள் வியாபாரமாக்கப்பட்டும் அடிப்படைவாதத்திற்குள் வீழ்தப்பட்டுள்ளன. இவற்றின் வடிவங்கள் காவிகளாகாவும் கறுப்பு உடுப்புகளாகவும் வெள்ளை அங்கிகளாகவும் மாற்றப்பட்டு இன்று உலகம் சீரழிக்கப்பட்டுவருகின்றது.
எனக்கு உடன்பாடுகள் இல்லாவிடினும் அட்சயதிதி பற்றி நம் முன்னார்களும் புராணங்களும் நம்பிக்கைகளும் இதற்குள் இருக்கும் மெஞ்ஞானம் விஞ்ஞானம் என்பதை இத்துறை சார்ந்தவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பார்போம்…
அட்சய திருதி அன்று நகைவாங்கினால் நகை வந்து சேரும் என்று எந்த ஒரு புராணத்திலும் , இதிகாசத்திலும் , ஜோதிட சாத்திரத்திலும் குறிப்பிடவில்லை..

1. ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் :திதிகள் மொத்தம் வளர்பிறை திதி 14 .தேய்பிறை திதி 14. அமாவாசை 1. பௌர்ணமி 1. ஆக 30 நாட்கள் ஒரு மாதம்.இந்த திதியில் மூன்றாம் திதியில் தான் சந்திர தரிசனம். அதாவது மூன்றாம் பிறை வருகிறது. இதைதான் திருதியை என்று அழைக்கப்படுகிறார்கள்.இந்த திதியைதான் கணக்கு வைத்து அதுவும் சித்திரை மாதம் வரும் திருதியை வைத்துக் கொண்டு அட்சய திருதியை என்று அழைக்கின்றனர்.பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் அதுவும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை மூன்றாம் திதியில் விவசாய பயிர்களுக்கு ஏற்ற நாள் தான் என்று குறிப்பிடப்படுகிறது.மேலும் பொதுவாக வளர்பிறை மூன்றாம் நாளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் ஜெயமே..மேலும் அது பிறைபோல் வளரும் என்று ஐதீகம்..இவை மாதத்திற்கு ஒரு முறை வளர்பிறை வரும்
இதை பிரதானமாக வைத்து நகைக் கடைக்காரர்கள் தந்திரமாக மக்கள் மத்தியில் அவர்கள் ஏழையோ, பணக்காரர்களோ அதை பற்றி கவலை கொள்ளாமல் தன் காரியம் வெற்றியடைந்தால் போதும் என்று அட்சய திதி என்று மிக பிரபலமாக விளம்பரம் செய்கிறார்கள்.
2. அள்ள அள்ள குறையாத அட்சயம் பாத்திரம் உண்டு?சோழ நாட்டில் திருவையாற்றில் அருகில் சோற்றுத்துறை என்று ஒரு தலம் உள்ளது.இத்தலத்தில் இறைவி அண்ணப்பூரணியாகவும் சுவாமி தொலையாச் செல்வராகவும் உள்ளார்.இத்தலபுராணம்படி சிவபக்தன் அவரின் மனைவி சிவ நகையாள் அட்சயம் பாத்திரம் பெற்ற வரலாறு உள்ளது.
3. மகாபாரதத்தில் ஆதாரம்:மகாபாரதத்தில் மொத்தம் 18 பருவங்கள் உள்ளன:அதில் 3 ஆவது பருவம் வனப்பருவம்.இதில்தான் சூரியனிடம் தருமன் அட்சயம் பாத்திரம் பெற்ற வரலாறு உண்டு..(பசியை போக்கிக் கொள்வதற்கு).3. மற்றொரு ஆதாரம்மகாபாரதத்தில் ஜோதிடத்தில் புலமை பெற்ற சகாதேவன்அட்சய திதியில் நகை வாங்கினால் மேலும் நகை பெருகும் என்று குறிப்பிடவில்லை.
4. சிவபெருமான் சந்திரனை சூட்டிக்கொள்ளல்தக்ஷனின் 27 புத்திரிகளை திருமணம் செய்து கொண்ட சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் அன்பு கொண்டான்.இதைபொறுக்காமல் ஏனைய பெண்கள் தக்ஷனிடம் முறையிட , தக்ஷன் சந்திரனை நீ தேய்ந்து போய்வாய் என்று.நாள் செல்ல செல்ல தேய்ந்து வரும் நிலையில் இறுதியாக சிவனிடம் சென்று முறையிட்டான்.சிவனோ சந்திரனின் நிலைமையை கண்டு தலையில் சூட்டிக்கொண்டான்.வார் சடைமேல் வளரும்சிவனின் தலையில் இருப்பது மூன்றாம் பிறை சந்திரன் ஆகும்..
இதை மையமாக வைத்து தான் பொது விதியின் அடிப்படையில் மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.ஆக மக்களே தயவு செய்து அட்சய திதியில் நகை வாங்குவது சிறப்பு என்பது நகைக்கடைக்காரர்களின் வியாபார நோக்கத்திற்காகவே என்று இங்கு ஆதார பூர்வமாகவும் – வரலாற்று பூர்வமாகவும் குறிப்பிடுகிறோம்..அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் சிறப்பு என்று சொல்லி தனது யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள்.தங்கள் அன்பானவர்; தங்களுக்கு உள் அன்போடு தங்க நகைகளை எந்நாளில் வாங்கித் தருகிறார்களோ அதுவே அட்சய திருதியை.- தொண்டீசன்
ஒரு கடவுள் நம்பிக்கையுடையவரகளின் கூற்றை நான் மேலே தந்திருக்கின்றேன்.பண்டிகைகள் கொண்டாட்டத்திற்குரியவை சந்திப்புகளை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை நட்பை அன்பை வளர்த்துக் கொள்ள பயன்படுத்துங்கள் இந்த ‘மெஞ்ஞானம்” இற்குள் ஏதாவது விஞ்ஞானம் உள்ளதா என்பதை தேடுகள் ஒரு சிலரின் கல்லால் பெட்டியை தங்கள் உடல் உழைப்பால் உருவான நாணயத்தால் நிரப்பாதீர்கள். கொண்டாடுவோம் பண்டிகைகளை அன்புள்ளங்களுடன் இணைந்து