ஜூலை 16 நூற்றாண்டு தின நிகழ்வின் நினைவூட்டல்

ஜூலை 16 நூற்றாண்டு தின நிகழ்வின் நினைவூட்டலாக ஏற்றுக் கொள்ளும்படி அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
++++++++++++++++++++++++++++++
மனிதன் முத்தையா, சங்கானை வாசி, அனைவராலும் Man முத்தையா என்று அழைக்கப்பட்டவர் எழுதிய கவிதை, “கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்” 25வது ஆண்டு நினைவாக பிரசுரிக்கப்பட்டது.

அனைவரையும் காத்தவனே!

பாமரர் மேல் உன் அன்பினைச் சொரிந்தாய்
படித்தவர்க்கெல்லாம் அறிவினைப் பகிர்ந்தாய்
மாணவர் தமக்கு வழிகாட்டி அகமகிழ்ந்தாய்
மாமகனே காத்தி ஏழைப் பங்காளா!

தூயவனே! உன் துடிப்பான தத்துவத்தை 
வேடிக்கையாகப் பேசிப் புரிய வைத்தாய்
ஞாலமெங்கும் செம்பதாகை – பரப்பி
சிறகடிக்க சிந்தை கொண்டு நின்றாய்

காத்தார், காத்தார் என்றே மக்கள் உமக்கு
காத்திரமாய் ஈந்தனரே அப் பெயரை
அனைவரையும் காத்தவனே – காத்தி காத்தி
உனையன்றி யாவர்க்குப் பொருந்தும் இப்பெயர்?