(Katsura Bourassa)
என்னைப் போன்றவர்கள் புலம் பெயர்ந்த காலத்தில் அந்தந்த நாடுகளிலிருந்த மொழிகளை இலகுவில் கற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் எமது மனங்கள் இருக்கவில்லை. அல்லது எமது மனங்களால் அணைத்துக் கொள்ளக் கூடியதாக அந்த மொழிகள் இருக்கவில்லை. இதில் அதிகமான விதிவிலக்குகள் இருக்கின்றன. சில நாடுகளில் அந்த நாட்டின் மொழி கட்டாயம் கற்கவேண்டிய ஆரம்பகாலங்கள் இருந்ததாக அறிகிறேன்.அவை வேறுவிதமானவை. அப்படியிருந்த பொழுதுகளிலும் ஈழ அரசியற் சூழல்களை முன்நிறுத்தி பலரால் சமூக நீதிக்கான செயற்பாடுகள் பல்வேறு விதத்தில் நடைபெற்றபடிதான் இருந்தன. இதில் சமூக நீதியை முன்நிறுத்துவதற்குரிய இலக்கியத்திற்கான இடம் அனைத்துத் தளத்திலும் முக்கியமானதாக இருந்தது. இந்தச் சூழல் ஓடிக்கடந்து ஒரு 30 வருடம்.