கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.