எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்?

(Karunakaran)

இன்று தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் அதனுடைய அரசியலையும் ஆதரிக்கின்ற எழுத்தாளர்கள் மற்றும் கலை வெளிப்பாட்டாளர்களில் எத்தனைபேர் அந்த அரசியலின் வழி மக்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்? (இதில் போராளிகள் விலக்கு) தொடர்ந்து பங்கேற்கின்றனர்? எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்? எவ்வளவு பேர் மக்களோடிணைந்து எளிய வாழ்க்கையை வாழ்கின்றனர்? மக்கள் சந்தித்த, சந்திக்கும் நெருக்கடிகளில் தம்மையும் இணைத்தவர்கள் யார் யார்? இழப்புகளையும் வலிகளையும் நேரடியாகச் சந்தித்தவர்கள், தாங்கியவர்கள் எத்தனைபேர்? எத்தனைபேர் சமூகப் பிரச்சினைகளிலும் சமூகத்தில் நிலவும் சாதி, பிரதேச வேறுபாடு, பால் நிலை ஆதிக்கம் போன்ற அசமத்துவ நடைமுறைகளுக்கு எதிராகப் போரிடுகின்றனர்?