லண்டன்வாசியான கஸ்தூரியின் “தாத்தா, இன்னிக்கு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும் நீ கிளம்பு சீக்கிரம்.”
“வேண்டாம் சாமி, காலெல்லாம் வலிக்குது,
நடக்கக் கஷ்டம். வீட்ல இருக்கலாம்.’
“வீல்சேர் எடுத்துட்டு போலாம், நான் தள்ளிட்டு வர்றேன். கார்ல ஒரு மணிநேரம்தான் ஆகும்.”
‘சரி போலாம். இதென்ன இவ்வளவு தூரம்,
நம்மூர்ல இருந்து ஈரோடு போற தூரம் இருக்குமாட்ட இருக்குது?’
“அம்மா சீக்கிரமா வண்டியோட்டிரும் தாத்தா.”
இடம் வந்தவுடன்,
“இதென்ன சாமி இப்படி இருக்குது சமாதிகளாட்டம்!?”
“ஆமா தாத்தா, சமாதிகதான்.
உன்னோட பிரெண்ட் இருக்காரு இங்க வா…”
“என் பிரண்ட் யாரு இங்க இருப்பாங்க”ன்னு சிரித்துக்கொண்டே வந்து,
கண்களில் நீர் துளிர்க்க –
ஜெர்க் ஆகி நின்ற இடம் –
கார்ல் மார்க்ஸும் ஜென்னியும்
நிரந்தரமாகத் துயிலுமிடம்.
செவ்வணக்கம் காம்ரேட்!