போர்ச்சுகலில் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் நல இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த சோசலிஸ்டு கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்டோபர் 6 ஆம் தேதியன்று போர்ச்சுகல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு நடந்த இந்தத் தேர்தலில் சோசலிஸ்டு கட்சி 106 இடங் களைப் பெறுகிறது. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 85 இடங்கள் கிடைத்திருந்தன. போர்ச்சுகல் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்குழு ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலையான ஆட்சி இருந்தது. இந்த முறையும், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இடதுசாரிக்குழுவுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன. சோச லிஸ்டு கட்சியின் தலைவரும், பிரதம ருமான அன்டோனியோ கோஸ்டா, இந்த இரண்டு கட்சிகளுடனான உறவு தொடரும் என்று அறிவித்துள்ளார்.