(எம். காசிநாதன்)
தமிழ்நாடு இடைத் தேர்தல் முடிவுகள், வழக்கமான இடைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், செய்திகள் நிறைந்தவை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் ஆளும் அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சி வைத்தியத்தையும் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள ‘விக்ரவாண்டி’ இடைத் தேர்தல், தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணியின் மறைவால் ஏற்பட்டது.