தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் 1 முதல் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மேற்படி சம்பள அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தால் கைசாத்திடப்படவிருந்த முத்தரப்பு ஒப்பந்தம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.