(சாகரன்)
கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது
கடுமையான தொடர்பு – தடமறிதல் (contact-tracing process) செயற்பாடுகள்:
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொடர்பு – தடமறிதல் செயல்முறை மூன்று படிகளை உள்ளடக்கியது: வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்று சந்தேகிக்கப்படும் 1. நோயாளரை அடையாளம் காணுதல், 2. நோயாளர் பற்றி தகவல்களை திரட்டுதல் மற்றும் 3. நோயாளரைப் பின் தொடர்ந்து அவதானித்தல் ஆகும். கோவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமான மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார வல்லுநர்கள், பொதுப் பாதுகாப்புப் பணியாளர்கள், இராணுவம் மற்றும் அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி சமூகத்திலிருந்து விரைவாக இனம் கண்டு தனிமைப்படுத்துவதில் வியட்நாம் அரசு வெற்றி கண்டது.