உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்த இயலாதவர்களாக்கி சிறிலங்காவை அச்சுறுத்தலற்ற நாடாக்க வேண்டும் என்ற வேணவாவை சிங்களவர்களிடத்தில் ஏற்படுத்தியதன் விளைவாக, அப்படியொரு விடயத்தை செயற்படுத்தவல்ல ஆளுமையாக கோத்தாபயவினை சிங்கள மக்கள் பார்த்தார்கள்.