கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியதற்கு பின்னர் இன்று தான் முதன்முதலாக நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.