(Jothimani Sennimalai)
வரலாற்றில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகமும் ,வீரமும் நிறைந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இணையான சரித்திரம் உலக வரலாற்றிலேயெ வேறெங்கும் இல்லை . அவர் குழந்தைகளைக் கூட கொடிய ஆங்கிலஅரசிடம் பணயம் வைக்க நேரிட்டது. அந்த மைசூர்புலி கடைசிவரை களத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது . அதுமட்டுல்ல தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், கட்டபொம்மன் போன்ற மாவீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார் திப்பு. வட இந்தியாவில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு தென் இந்தியா ஒரு கெட்ட கனவாக மாற திப்பு ஒரு காரணமாக இருந்தார். அதே போல நவீன இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத காந்தி. இந்திய சுதந்திர வரலாற்றில் இருவருக்கும் தனித்த இடமுண்டு .
திப்புவையும் ,காந்தியையும் ஏன் சங்கப்பரிவாரம் வெறுக்கின்றது ?
அன்றைய ஆங்கில அரசுக்கு கடைசி நிமிடம் வரை சேவகம் செய்து ,மன்னிப்புக் கடித்கங்கள் எழுதிக்கொடுத்து ,அவர்களை மகிழ்விக்க சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகப் பரம்பரை இந்த தேசத்தின் விடுதலைக்கு உயிரையே கொடுத்த மாவீரர்களை பழிப்பது இயல்புதானே!
ஆனால் வரலாறு தியாகிகளைத் தியாகிகள் என்றும் துரோகிகளைத் துரோகிகள் என்றுமே என்றென்றும் குறித்து வைத்திருக்கும் . திப்புவையும் ,காந்தியையும் பழிக்கின்ற ஒவ்வொரு கணமும் உங்கள் பழைய துரோக வரலாறு வெளியில் வந்து பல் இழிக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.