உலக நடப்பு:
எரித்திரிய நாட்டில் ஒருஆண் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என அரசு கடும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டில் ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருப்பதால்தான் இந்த உத்தரவு. எரித்திரிய நாட்டின் மொத்த சனத்தொகை நான்கு மில்லியனாகும்.1998 – 2000ம் ஆண்டுவரை நடைபெற்ற யுத்தத்தில் ஒருலட்சத்து ஐம்பதுஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்தால் ஆண்களின் தொகை குறைந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை செய்த அரசு இரண்டு பெண்களையாவது திருமணம் செய்யும் ஆண்களுக்கு பண உதவி மற்றும் வீட்டுவசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஊரவன் விருப்பு:
தயவு செய்து இந்த செய்தி குங்குமப் பொட்டு கவுண்டர், எங்கள் வடக்கு முதல்வர் கண்ணில் படாமல் காதில் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கண்ணில்பட்டால் காதில் நுழைந்தால் முப்பது வருட யுத்த அழிவில் இறந்த போராளிகள், குடும்ப தலைவர், நாட்டை விட்டு பாதுகாப்பு தேடி ஓடி அகதிகளான ஆண்களின் வெற்றிடத்தை நிரப்ப இது போல் ஒரு தீர்மானத்தை வட மாகாண சபையில் நிறைவேற்றி உறுப்பினர்கள் வினையமாக கேட்ட வினைத்திறன் உள்ள மாகாண சபை செயலுக்கு அனுமதி கொடுத்துவிடுவார் ஜாக்கிரதை!
(ரா ரா)