பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரதான சுதந்திரதின வைபவத்தில், தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதத்தைப் பாடுவது குறித்த முடிவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எடுப்பர் என, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார். தேசியக் கீதத்தை தமிழிலும் இசைக்க வேண்டும் என நானும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய கீதம், விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தை தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.
இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கினர். அதற்கு அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார். முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், தேசிய கீத விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தைத் தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.
இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கவுள்ளனர். இது தொடர்பில், அமைச்சரவையில், கருத்தொற்றுமை கிடைத்திருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.