மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.