(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கடந்த வார அரசியற்களம் ‘தொலைபேசி அழைப்பு’களால் நிரம்பியிருந்தது. இங்கு இரண்டு நிகழ்வுகள் முக்கியமானவை. ஒன்று, கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில், விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி தெரிவித்த கருத்துகளை அடுத்து, ஜனாதிபதி, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடுந்தொனியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தான் பேசிய கருத்துக்கு முற்றிலும் மாறாக, மறுநாள் கருத்து வெளியிட்டிருந்தார். அதிகாரத்தின் குரலின் வலிமையை, நாம் ஐயப்பட வேண்டியதில்லை. ஆனால், அதை விளங்குவதே இன்று நம்முன்னுள்ள சவால்.