சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அதிகாலையில் தாஜ்மஹாலின் பின்னாலிருந்து குறுகலாய் மெலிந்தோடும் யமுனையைப் பார்த்தபடி நானும் நண்பர் தாமரை செந்தில்குமாரும் நின்றிருந்தோம். தொலைவில் இருந்த ஆக்ரா கோட்டையைக் காட்டி, ஷாஜஹானை ஔரங்கசீப் சிறையெடுத்த வரலாற்றை இருவரும் பேசலானபோது, இயல்பாக தமிழக அரசியல் அந்த உரையாடலுக்குள் நுழைந்தது.