விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசான்ஜ் சட்ட விதிகளுக்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் 5 நீதிபதிகள் சில மணிநேரங்களுக்கு முன் இன்று (பெப்ரவரி 5 2016) அறிவித்து உள்ளது. யூலியன் அசான்ஜ் இன் சுயாதீன நடமாட்டத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. யூலியன் அசான்ஜ் யை அமெரிக்கா உட்பட பிரித்தானியா சுவீடன் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்க முற்பட்ட போது 2012 ம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள எக்குடோரியன் உயர்ஸ்தானிகர் இல்லத்தில் யூலியன் அசான்ஜ் தஞ்சமடைந்தார். தற்போது ஐநா வின் சட்டத்துக்கு புறம்பான தடுத்து வைப்பு;புகள் தொடர்பான செயற்குழு பிரித்தானியாவும் சுவீடனும் யூலியன் அசான்ஜ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசான்ஜ் அமெரிக்காவின் அதிகார துஸ்பிரயோகங்களையும் லத்தீன் அமெரிக்க தலைவர்களை கொல்வதற்கு அமெரிக்க உளவு நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளையும் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தி இருந்தார். அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட சித்திரவதைகளை அம்பலப்படுத்திய பெருமையும் விக்கிலீக்ஸ் க்கு உரியது. அதனால் வீக்கிலீக்ஸ் நிறுவனரைப் பழிவாங்குவதற்காக விரிக்க்கப்பட்ட வலையே அவர் மீதான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு என்பதை ஐநா தீர்ப்பும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.