திராவிடக் கட்சிகளின் ஆளுமை மிக்க தலைவர்களான ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் மறைந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சிகள் தங்களின் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. பதிவான வாக்குகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும் 67.1% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அமமுக, மதிமுக ஆகிய சிறிய திராவிடக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்தம் 70.4% வாக்குகள். இதுதான் திராவிடக் கட்சிகள் இதுவரை பெற்றிருக்கும் இரண்டாவது அதிகபட்ச வாக்குவீதம்; திராவிடக் கட்சிகள் 2016-ல் பெற்ற இதுவரையிலான அதிகபட்ச வாக்குவீதமான 73.9%-ஐவிட இது 3.5% மட்டுமே குறைவாகும். திமுக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதைவிட திராவிடக் கட்சிகள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பது நம் கவனத்தை அதிகமாகக் கவர்கிறது.