(சிக்மலிங்கம் றெஜினோல்ட்)
“வலு கெதியில யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று சில ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள் சூழலியலாளர்கள். இது சீரியஸான உண்மையே. ஆனால், யார்தான் உண்மையை மதிக்கிறார்கள்! பாலையாகினால் என்ன? சோலை வரண்டால் என்ன? கிடைப்பது பொக்கிஷம். எடுப்பதையெல்லாம் அதற்குள் எடுத்துக் கொள்வோம் என்று பனைகளை வெட்டுகிறார்கள். மணலை அகழ்கிறார்கள். காடுகளை அழிக்கிறார்கள். போதாக்குறைக்கு கடலோரங்களையும் களப்புக் கரைகளையும் கூடத் தங்கள் இஸ்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு வளமான செம்மண் தோட்ட நிலங்களையெல்லாம் கடைகளுக்கும் குடியிருப்புகளுக்குமாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டே போனால் இந்தச் சின்னஞ்சிறிய யாழ்ப்பாணக் குடாநாடு பாலையாகாமல் வேறு எப்பிடியாகும்?