இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்தார். பிரதமர் ரணிலுடனான சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட தூதுக் குழுவினரும், இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது இருநாட்டு உறவுகள், மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட்டதாக தெரியவருகிறது. மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்த சுஷ்மாவுக்கு மகிந்த ராசபக்ச பெறுமதி வாய்ந்த வைர அட்டியல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். ஆனால் இம்முறை ரணில் எந்த அன்பளிப்பையும் வழங்கவில்லை என தெரியவருகிறது. (தினக்கதிர்)