14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. தாதியர் துணை மருத்துவ சேவையாளர்களின் பொது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதில் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சும் வேண்டுமென்றே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதால், இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதென, மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த சபையின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று காலை 8 மணியிலிருந்து இத்தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றார்.