சுயஸ் கால்வாயை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் முடக்கிய பாரிய கொள்கலன் கப்பலொன்றானது இறுதியாக சுயஸ் கால்வாயை விட்டு வெளியேறுகின்றது. கப்பலின் உரிமையாளர்கள், காப்புறுதியாளர்களுடன் இழப்பீட்டு ஒப்பந்தம் ஒன்றை எகிப்து கைச்சாத்திட்டத்தையடுத்தே குறித்த கப்பல் வெளியேறுகிறது. கப்பலானது மூன்று மாதங்களாக கால்வாய் நகரமான இஸ்மைலியா நகரத்துக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்காத நிலையில், 550 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை எகிப்து கோரியிருந்தது.