(வரதராஜா பெருமாள் )
பிரித்தானிய காலனி ஆதிக்கத்திடமிருந்து சுதந்திரமடைந்த இலங்கை இதுவரை பத்து செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவர்களைக் கண்டிருக்கின்றது. இரண்டு சேனநாயக்காக்கள், மூன்று பண்டாரநாயக்காக்கள், ஜெயவர்த்தனா, பிரேமதாசா, ராஜபக்சா, மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர். இவர்கள் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு வேளையும் பொருளாதாரத்தில் ஆச்சரியங்கள் நிகழப் போகிறது என்றே மக்கள் நம்பினர். ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கையின் பொருளாதார ஓட்டத்தின் திசையைத் திருப்பினார் என்பது உண்மையே. அவருக்குப் பின் ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஜே.ஆர் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கையை அடுத்தடுத்து விமர்சித்த போதிலும் அவர் வகுத்து விட்ட பொருளாதாரப் பாதையிலிருந்து விலகாமலே செயற்பட்டார்கள்.