பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண துறைமுக நகரமான க்வாதாரில் அரசுக்கு எதிரான புரட்சி வெடித்தது. மக்கள் தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை மற்றும் க்வாதாருக்கு அருகிலுள்ள கடலில் சட்டவிரோத மீன்பிடி (அங்கு பெரும்பாலும் மக்கள் மீன்பிடியை நம்பி வாழ்பவர்கள்) போன்றவற்றை எதிர்த்தே இந்த போராட்டத்தை நடத்தினர்.