நியூசிலாந்தின் கிறைஸ்சர்ச் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன. நியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவுநகரான கிறைஸ்ட் சர்ச் நகரில் இருந்து கிழக்கே சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் கடலுக்குள் சரிந்து விழுந்தது. உயிர்பலி, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.