(பெரணமல்லூர் சேகரன்)
கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட் ரோ 1926 ஆகஸ்ட் 13இல் பிறந்தார். தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஸ்பெயின் நாட்டவர். தாயார் லினா கியூபாவைச் சேர்ந்தவர். வசதியான விவசாய குடும்பத்தில் பிறந்த பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் சமூக அறிவியல் பட்டப் படிப்பு படித்தபோது அவருடைய சிந்தனை அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்காவின் கைப்பா வையாக செயல்பட்ட சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக புரட்சியாளராக மாறினார். 1953-ஆம் ஆண்டு இளைஞர்க ளைத் திரட்டி கிழக்கு நகரான சாண்டி யாகோவில் அரசுக்கு எதிராகப் போரா டினார். இதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இதனால் பிடல் காஸ்ட்ரோ வும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.