(அ. வரதராஜா பெருமாள்)
சிறியனவாயும் சிதறுண்டு பரவிக் கிடக்கும் வறுமையான கிராமங்களின் நாடே இலங்கை
அரச அறிக்கைகளும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையை அதனது தலாநபர் வருமானக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு மத்திய தர வருமான தரம் கொண்ட ஒரு நாடு என்று வகைப்படுத்தியுள்ளமை அனைவரும் அறிந்ததே. ஆனால், இங்கு மிகப் பெருந்தொகையில் சனத்தொகை கிராமங்களிலேயே உள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 75சதவீதத்துக்கு மேற்பட்டோர் இன்னமும் கிராமங்களிலேயே வாழ்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.