ரஷ்யாவின் எச்சரிக்கையும், புவி அரசியலும்

(க.ஆனந்தன்)

கியூபா ஏவுகணை நெருக்கடி க்குப்பின் அதற்கு சற்றும் குறைவில்லாமல், உக்ரை னில் ரஷ்யா ஆக்கிரமிக்கப் போகிறது என்ற பிரச்சாரத்தை அமெரிக்க நேட்டோ படை கள் கட்டவிழத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு யுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்த வரை அவர் பதவிக்கு வந்த ஓராண்டு என்பது தோல்விகளின் ஆண்டாக உள்ளது, ஏற்கனவே அவர் மிகுந்த விளம்பரத்துடன் ஏழை மக்களுக்கும் முதி யவர்களுக்கும் வாக்குறுதி அளித்தது போல் “பில்ட் பேக் பெட்டர்” திட்டம் தோல்வி யில் முடிந்தது.

அடுத்து குடியரசுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில், சிறுபான்மை மக்கள் மற்றும் கருப்பின-லத்தீன் மக்கள் வாக்க ளிப்பதை தடுக்க கொண்டுவந்த சட்டங் களைத் தடுக்க, அனைத்து மக்களின் வாக் குரிமையை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட வாக்குரிமைச் சட்டம் செனட்டில் அவரது கட்சியினர் இருவராலேயே தோற்கடிக்கப் பட்டது.