கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)

(செங்கதிரோன்)

கிறுகுகிறுக்குகிறுக்கிகிறுகிறுப்பு, பூவல்வக்கடை,  நட்டுமை 

மட்டக்களப்பு மாநிலத்தில் ‘மறுகுதல்’ போன்று ‘கிறுகுதல்’ என்ற கிளவியும் உண்டு. கிறுகு என்றால் திரும்பு என்று அர்த்தம். ‘இந்தப்பக்கம் கிறுகு’ என்றால் ‘இந்தப்பக்கம் திரும்பு’ என்பதாகும். ‘கிறுகி வா’ என்றால் ‘திரும்பி வா’ என்றாகும். ஆங்கிலத்தில் ‘Turn’ என்பதற்குச் சமம்.