எல்லை தாண்டலுக்கு முற்றுப்புள்ளி

(லக்ஸ்மன்)

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையின் பிரதிபலன் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது.  எல்லை தாண்டுவதும் அதற்காக கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தண்டனை வழங்குவதும், படகுகளை அரசுடமையாக்குவதும், கைதாகும் மீனவர்களைப் பரிமாறிக்கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளின் கடல் எல்லைப் பிரச்சினையால் யாருக்கு இலாபம் அதிகம் என்று சிந்திப்பதனைவிடவும் இதிலுள்ள அரசியலை ஆழ்ந்து ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.