வலிகாம கிணறுகளில் கழிவு எண்ணெய்! வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!
வலிகாமப் பகுதியின் கிணறுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலந்து, இரண்டு லட்சம் பேர்வரையானவர்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சரும், அமைச்சர் ஐங்கரநேசனும், காலத்திற்குக் காலம் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளதுடன், ஒரு ”நிபுணர் குழு” இனையும் அமைத்து, அந்த நிபுணர் குழுவானது ஒரு அறிக்கையையும் அண்மைக் காலத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கிணற்று நீரில் ஆபத்தான BTEX இல்லை எனவும், மலக் கழிவுகள், நைற்றேற்றும் தான் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது!
இது சுண்ணாகத்தில் இயங்கி வந்த Northern Power Company இனது என்ஜின்களின் செயற்பாடுகள், எந்தவகையிலும், வலிகாமத்தின் நில அடி நீரில் மாசு படுத்தலைச் செய்யவில்லை என உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையாக மாத்திரம்தான் அமைந்துள்ளது! வட மாகாண சபையின் முதலமைச்சரதும், அமைச்சர் ஐங்கரநேசனதும் நடவடிக்கைகளும், வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட ”நிபுணர் குழு” வினது நடவடிக்கைகளும் ஆராயப்படவேண்டிய மிக முக்கிய விடயங்கள் ஆகின்றன. முதலாவதாக, வலிகாமப்பகுதியின் நில அடி நீரில் எப்படியான ஆபத்தான இராசயணப் பொருட்கள் கலந்திருக்கமுடியும் என்பது, Northern Power Company இனது என்ஜின்கள் எதனை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படுகின்றன என்பதால்தான் நிர்ணயிக்கப்படுகிறது! ஆனால், வட மாகாண சபையின் ”நிபுணர் குழு” ஆனது, அந்த என்ஜின்கள் எதனைக் கொண்டு இயக்கப்படுகின்றன என்பதை அறிந்து உறுதிப்படுத்தவேயில்லை. இதை அந்தக் கொம்பனியின் என்ஜின்களின் இரகம், ஏனையவைகளைக் கொண்டுதான் அறிந்திருக்கமுடியும்.
இதைவிட, Northern Power Company உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு விநியோகித்த வந்த மின் சக்திக்கு, மாதாமாதம் ஒரு Unit இக்கு அது எவ்வளவு பணத்தைப் பெற்று வந்துள்ளது என்பதூடாகவும் இதனை அறியமுடியும். ஒவ்வொரு வெவ்வேறு எரிபொருளுக்கும், இலங்கை மின்சார சபையானது வெவ்வேறு கட்டணத்தைத்தான் ஒரு Unit மின்சக்திக்குச் செலுத்துகிறது! ஆனால், இங்கு ஒரு வியப்பான ஏமாற்று விடயம் என்னவென்றால், Northern Power Company அதனது என்ஜின்களை Heavy Oil கொண்டு இயக்கி வந்திருந்தபோதும், அந்தக் கொம்பனிக்கு டீசலில் இயக்கும் கூடிய பணமே மின்சார சபையால் ஒவ்வொரு Unit இற்கும் செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறியமுடிகிறதாக அறியப்படுகிறது! இந்த நிலையில், Northern Power Company ஆனது இலங்கை மக்களின் பல பில்லியன் பணத்தை இதுவரை காலமும் கொள்ளையடித்துள்ளது, அதற்கு மின்சார சபையும், மின் சக்தி அமைச்சும், அரசும் துணை போயிருந்தன என ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்! வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட ”நிபுணர் குழு” வினது ஏமாற்று நடவடிக்கைகளைச் சரியாக விளங்கிக்கொள்ள, ஒருவருக்கு பின்வரும் விடயங்கள் பற்றிய அடிப்படை அறிவு இருக்கவேண்டும்:
1) BTEX என்றால் என்ன? 2) அதில் உள்ள ஐதறோ கார்பன்கள் எவை? 3) அவை ஒவ்வொன்றினதும் கொதி நிலை, நீரில் கரையும் அளவுகள் எவை? 4) மசகு எண்ணெய்யினை (Crude oil) வடிகட்டும்போது, என்னென்ன வெப்பநிலைகளில் வெவ்வேறு எரிபொருட்கள் பெறப்படுகின்றன? இவைகளை வைத்தே நிலஅடி நீரில் சுண்ணாகத்தின் Northern Power Company இனது என்ஜின்களின் பயன்பாட்டால் எவையெவைகள் கலந்திருக்கமுடியும் என்பதை அறியமுடியும். 1. BTEX என்றால் என்ன? BTEX is an acronym that stands for benzene, toluene, ethylbenzene, and xylenes. These compounds are some of the volatile organic compounds (VOCs) found in petroleum derivatives such as petrol (gasoline). Toluene, ethylbenzene, and xylenes have harmful effects on the central nervous system. II) Benzene, toluene, ethylbenzene, and xylenes என்பவைகளின் கொதி நிலைகளும், நீரில் கரையும் அளவுகளும்: Compound Boiling point °C Water solubility mg l-1 Benzene 80.1 1780 Toluene 110.8 535 o-Xylene 144.4 175 m-Xylene 139 135 p-Xylene 138.4 198 Ethylbenzene 136.2 152 III) மசகு எண்ணையினை வடித்தலும், வெவ்வேறு வெப்பநிலைகளில் பெறப்படுபவையும்: கீழே தரப்பட்டுள்ள படமானது, இந்த விபரங்களை எளிய முறையில் தருகிறது.
மசகு எண்ணெய் வடிப்பு
இதிலிருந்து, 1) 150 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”பெற்றோல்” (Petrol) கிடைக்கிறது. 2) 150 – 200 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”மண்ணெய்” (Kerosene) கிடைக்கிறது. 3) 200 – 300 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”டீசல்” (Diesel) கிடைக்கிறது. 4) 300 – 370 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”எரி ஓயில்” (Fuel Oil) கிடைக்கிறது. 5) 370 – 408 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் Lubricating oil, Paraffin wax, Asphaltஎன்பவைகள் கிடைக்கின்றன. BTEX உள்ளவைகளின் கொதி நிலைகள் 150 பாகை சென்ரிகிறேட் இலும் குறைவாக இருப்பதால்,பெற்றலில் மாத்திரம்தான் BTEX காணப்படும். 370 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”எரி ஓயில்” (Fuel Oil) கிடைப்பதால், இதில் BTEXஎல்லாம் ஏற்கனவே ஆவியாகிய நிலையில், அது காணப்படமாட்டாது! இந்தநிலையில், பொதுவாகக் கூறினால், Northern Power Company இனது என்ஜின்களை Fuel Oilஇயக்குவதனால், BTEX என்பது மண்ணிலும், நிலவடி நீரிலும் என்ன காரணத்தாலும் கலக்கமாட்டாது. இந்த நிலையில்,
1) வடக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட ”நிபுணர் குழு” ஏன் கிணற்று நீரில் BTEX உள்ளதா என்பதைப் பரீட்சித்தது? 2) அந்த ”நிபுணர் குழு” ஏன் வலிகாமக் கிணற்று நீரில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய BTEX இல்லை என அறிக்கை தயாரித்தது? இது பெரும் ஏமாற்றே!! ஏன் இந்த ஏமாற்று பரிட்சைகளையும், அறிக்கையையும் வட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட ”நிபுணர் குழு” வெளியிட்டது? Toluene can be used as an octane booster in gasoline fuels used in internal combustion engines. இதனால், பெற்றலில் Toluene ஏனையவைகள் காணப்படலாம். வாகனங்களுக்குப் பெற்றல் பயன்படுத்துவதால், காற்றினில் BTEX கழிவுகள் காணப்படலாம். ஆனால், Northern Power Company என்ஜின்களின் செயற்பாடுகளால் நில அடி நீரில் BTEX காணப்படவேமாட்டாது! IV) Northern Power Company என்ஜின்களின் செயற்பாடுகளால் நில அடி நீரில் கலந்திருக்கக்கூடிய ஆபத்தானவைகள் எவை?
Northern Power Company என்ஜின்களின் செயற்பாடுகளால் நில அடி நீரில் கலந்திருக்கக்கூடிய ஆபத்தானவைகள் Heavy metals, Grease, oil போன்றவைகளே! இவற்றினால் மனிதருக்கும், மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் பெரும் ஆபத்துக்கள் உருவாகும். ஆனால், வலிகாமத்தின் நிலவடி நீரில் இவை கலந்துள்ளனவா, இல்லையா என்பதை வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட போலி நிபுணர் குழு முழுமையாக ஆராயவேயில்லை! இது ஏன்? V) ஆராயவேண்டியவைகளை ஆராயாது, இருக்கமாட்டதவைகள் நீரில் உள்ளனவா என்பதை ஏன் ஆராய்ந்து, போலி ”நிபுணர் குழு” அறிக்கையை வெளியிட்டது? இது மிக முக்கியவொரு கேள்வியாகும். இங்குதான் ஒரு முக்கிய விடயம் அவதானிக்கப்படவேண்டும். Northern Power Company இனது செயற்பாடுகளால்தான் வலிகாமத்தின் நில அடி நீரில் கழிவு ஓயில்கள் கலந்துள்ளது, இது பெரும் பிரச்சினையை 2 லட்சம் வரையான மக்களுக்கு உருவாக்கியுள்ளது என்ற விடயம் ஆதாரபுர்வமாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணியான Shantha Abimanasigham தலைமையிலான குழு விளக்கிய நிலையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க Northern Power Company இடமிருந்து மின் சக்தியைக் கொள்வனவு செய்யவேண்டாம் என்ற கட்டளையை இலங்னை மின்சார சபைக்கு இட்டிருந்தார்.
அதேவேளையில், மல்லாகம் நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட 12 பேரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் Northern Power Company இனது மின் நிலையத்தினை மூடி சீல் வைத்திருந்தது. இதற்கு எதிராக Northern Power Company ஆனது யாழ்ப்பாண மேல் நீதி மன்றத்தில் மேன் முறையீடு செய்தபோதும், நீதிமன்றம் மின் நிலையத்தினை திறக்க அனுமதி வழங்கவில்லை! இந்த நிலையில், Northern Power Company கொழும்பு அப்பீல் கோட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு பல மாதங்களாகத் தொடர்கிறது! அப்பீல் கோடு ஆனது மின் நிலையத்தினை திறந்து, இயங்க அனுமதி கொடுப்பதாயின், வலிகாமத்தின் நில அடி நீரில் எந்த மாசடைதலும் நடைபெற வில்லை என்ற ஒரு ”நிபுணர் குழு” அறிக்கை தேவை!! இங்குதான் முதலமைச்சர் விக்னேஸ்வரனாலும், ஐங்கரநேசனாலும், வட மாகாண சபையாலும் விசேடமாக நியமிக்கபட்ட ”நிபுணர் குழு” என்பதும், அதன் அறிக்கையும் மிக முக்கியமாகின்றன!! இதைவிட மிக முக்கியமானது என்னவெனில், நேற்றைய தினம் மல்லாகம் நீதி மன்னறத்தில் நடைபெற்றவை!! அச்செய்தி பின்வருமாறு: கழிவு ஓயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கழிவொயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென அப்பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது கடந்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. வடமாகாண விவசாய அமைச்சர் வேறொரு நிகழ்விற்குச் சென்ற காரணத்தால் அவர் வருகை தர முடியவில்லை என வடமாகாண சபையின் அபிவிருத்தி அலுவலர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க முற்பட்ட போதும் நீதவான் அதனை நிராகரித்து பிடிவிறாந்து பிறப்பிக்க முற்பட்ட நிலையில் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது பொதுமக்கள் நலன் சார்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், சட்டத்தரணிகளான சோ.தேவராஜா, கே.சுகாஷ், சோபிதன், பி .பார்த்தீபன் ஆகியோரும் வடக்கு மாகாண சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜாவும் ஆஜராகியிருந்தனர். இதன் போது சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜா, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பது தொடர்பில் கதைப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் வடமாகாண சபைக்கு இல்லையெனவும், இந்த அதிகாரம் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கே உள்ளதாகவும் மன்றுக்குத் தெரியப்படுத்தினார். மக்களின் நீர்ப் பிரச்சனை தொடர்பான அதிகாரம் வட மாகாண சபையிடம் இல்லையென்றால், நீர் மாசு தொடர்பான ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அறிக்கையை ஏன் தயாரித்தது? அந்த அறிக்கையை வெளியிட்டதன் காரணம் என்ன என்பதை நீதிமன்றம் ஐங்கரநேசனின் சட்டத்தரணியிடம் வினவியது. ஏற்கனவே ஐந்து கிணறுகளில் ஈயம் கலந்திருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது. அந்தக் கிணறுகள் யாருடைய கிணறுகள் என வினாவப்பட்ட நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அது தொடர்பான விபரங்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். குறித்த விபரங்களை சுகாதாரப் பரிசோதகர்கள் பெற்று அதற்குரிய நடவடிக்கையை எடுப்பார்கள். அடுத்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.
இந்த நிலையில் வழக்கு அடுத்த மாதம் -17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.” வடமாகாண சபைக்கு வடக்கின் நீர், நீர் மாசடைதல், நீர் விநியோகம் என்பவைகளில் எந்தவித அதிகாரமும் இல்லையாயின், முதலமைச்சர் விக்நேஸ்வரனும், அமைச்சர் ஐங்கரநேசனும் ஏன் அந்த விடயங்கள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை விட்டு வந்தனர்? ஏன் அவர்கள் ஒரு ”நிபுணர் குழு” வினை அமைத்தனர்? ஏன் அந்த நிபுணர் குழு ஒரு அறிக்கையை நீரில் ஆபத்தானா எதுவும் இல்லை என விட்டது? இங்குதான் Northern Power Company இனது கொழும்பு அப்பீல் வழக்கு வருகிறது!! வடக்கு மாகாண சபையின் போலி நிபுணர் குழுவினது அறிக்கையானது மாகாண சபைக்கும் பயனற்றது, வடக்கு மக்களுக்கும் பயனற்றது! ஆனால், Northern Power Company இக்கு மாத்திரம்தான் பயனானது! ஆகவே, மாகாண சபையின் ”ஒரு சாராருக்கும்” பயனானதுதான்!! அப்படியாயின் வடக்கு தமிழ் மக்களின் அழிவில் எவர்கள் உண்மையில் நன்மையை அடைய உள்ளனர்? முகநூல்களிலும், இணையங்களிலும் அரசியல் பேசும் மேதாவிகளே! யாழ் குடாவின் தமிழ் மக்களுக்கு அவர்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையினர் உண்மையில் எதனைச் செய்கின்றனர்? ஏனைய அரசியல்வாதிகள் எவற்றைச் செய்கின்றனர்? இவைகளுக்கிடையில் இன்னொரு பேச்சும் இடையில் அடிபடுகிறது!! Northern Power Company இல் தமிழ் அரசியல் கட்சி சார்ந்த சிலரின் ”உறவினர்களும்” பெருமளவில் முதலீட்டினைச் செய்திருப்பதாக!! நல்லது நண்பர்களே! தமிழர்களது அரசியல் தொடரட்டும்!!