இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.
ஒரு தடவை திட்டம் தீட்டி எல்லையில் நின்றபோது எமது இளைஞர் ஒருவரின் காதலி கோவியர் சமூகத்தை சேர்ந்தவர்.அவர் மூலமாக தகவல் கிடைக்க எமது ஊரவர்கள் அணி அணியாக செல்ல அவரகள் ஓட்டம் பிடித்தனர்.
இரண்டாவது தடவை அவரகள் இருட்டோடு இருட்டாக ஓரிடத்தில் எமது ஊரை தாக்க தயாராக நின்றனர்.இதை அறிந்த கொடிகாம்ம் அய்யாவின் தம்பி தபால் சாமி என்பவர் தகவலை பரிமாற்றங்கள் செய்ய வசதியற்ற காரணத்தால் தன் வீட்டில் உள்ள துப்பாக்கியால் வெடி வைத்து எம்மவரகளை உசாராக்கினார்.எம்மவரகள் ஆயதங்கள் எதுவுமின்றி அவ்விடம் செல்ல அவர்கள் வேலி ஒன்றைக் கொழுத்தி விட்டு தன் பின நின்று துப்பாக்கி பிரயோகம் நடாத்தினர்.எம்மவரகள் படுத்துக் கிடந்தனர் .ஓடவும் முடியாது போராடவும் முடியாத நிலை.
இந்நிலையில் ஏனையவர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்கள்.எதிரிகளின் சரியான திசையை பார்க்க நெருப்பு பகை தடையானது.அவரகளின் குறி இவர்களை நோக்கி சரியாகவே வந்தன.இதைக் கேட்ட ஒரு 18 வயது இளைஞரும் புறப்பட்டு வந்தார்.அவருக்கு ஊர் எல்லையிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட துப்பாக்கி தெரியும். அதை எடுத்து வரும்போது ஒரு மரத்தில் இருந்து டோரச் லைற் ஒளி எமது ஊரவர்கள் மீது விழுவதை அவதானித்தார்.அந்த இருட்டிலும் அவர் குறி தவறவில்லை.அங்கிருந்து ஒருவர் அலறி வீழ்ந்தான்.அத்துடன் எதிரிகள் நிலை குலைய வேலையைத் தாண்டி எமது ஊரவர்கள் அவர்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.பலர் வெடிகாயங்களுடன் தப்பி ஓடினர்.எம்மவரும் எந்த காயமும் இன்றி தப்பி வந்தனர்.
மறுநாள் இறந்த இளைஞன் யாரென்று அடையாளம் கண்டனர்.அவரதான் இரத்தினத்தால் எச்சரித்து அனுப்பப்பட்ட நவரத்தினம்.வெள்ளாள சமூகத்தவர்.நம்மை எச்சரித்து துப்பாக்கி வெடி வைத்தவர் தபால் சாமி.இவர் கோவியர் கொடிகாம்ம் அய்யாவின் தம்பி. பின்னர் சாமியின் வீட்டைக் கொழுத்தி அவரை ஊரை விட்டு காலிபண்ண வைத்தனர்/
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)