ஐரோப்பிய யூனியன்
பார்லிமெண்ட் கூட்டம்.
காணொளியில் பேசுகிறார்
உக்ரெய்ன் செலென்ஸ்கி.
கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் –
“போரில் பின்வாங்கமாட்டேன் “
என்று செலென்ஸ்கி சொன்னவுடன் –
ஒரு ஆள் பாக்கி இல்லை –
எழுந்து நின்று கைதட்டுகிறான்.
எல்லாரும் ரஷ்யாவை பின்வாங்கச் சொன்னவன்.
எல்லாரும் ரஷ்யாவுக்குத் தடை போட்டவன்.
‘பேச்சுவார்த்தைக்குப் போ ‘
என்று உக்ரெய்னிடம்சொல்லாதவன்.
‘ஏன் குடிமக்கள் கையில் ஆயுதம் கொடுக்கிறாய்,
அவர்களைக் கேடயமாக்குகிறாய்’ என்று
செலென்ஸ்கியிடம் கேட்காதவன்.
அத்தனை பேரும் -இவ்வளவு வருடங்களாக
உக்ரெய்ன் தேசியவாதக் குழுக்களுக்கு
உக்ரெய்ன் ராணுவத்தின்மூலம்
ஆயுதம் கொடுத்து
உக்ரெய்ன் வாழ் ரஷ்ய குடிமக்களை
ஒடுக்கி வைக்கச் செய்தவன்.
அத்தனை பேரும் –
சண்டை நின்று விடக்கூடாது என்று
இப்போது மூட்டை மூட்டையாக
உக்ரெய்னுக்கு ஆயுதத்தை அனுப்புகிறவன்.
அவர்கள் முன் முஷ்டி உயர்த்தும் செலென்ஸ்கி
“போரில் பின்வாங்கமாட்டேன்!” எனும்போது
எழுந்து, கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.
இந்தப் போர் அமெரிக்காவுக்கும்
நேட்டோவுக்கும் செலென்ஸ்கிக்கும்
இனிக்கிறது என்று நான் எழுதியதன் –
இந்தப் போர் உக்ரெய்னுக்கு ஆகாது;
ரஷ்யாவுக்கும் கூடாது;
ஆனால், அமெரிக்காவுக்குத்
தேவையாக இருக்கிறது என்று
ரஷ்யா, உக்ரெய்ன் கம்யூனிஸ்டு கட்சிகள்
சொன்னதன் –
பொருள்
விளங்குகிறதல்லவா?
(Rathan Chandrasekar)